Sunday, February 1, 2009

Feb 09 - PIT

ஃபிப்ரவரி மாசத்துக்கு ஏதாவது ஆக்‌ஷன் படம் காமிக்கனும்னு சொல்லிட்டாங்க. வழக்கம் போல கிளரி பாத்ததில இந்த படம் மாட்டிச்சு. வெனிஸ்’ல இந்த PIAZZA ரொம்ப பிரபலம். ITALIAN JOB படத்தில கூட வருமே அதே இடம் தான்.

அங்க புறாக்களை கையில வைச்சு படம் எடுக்கறதுக்காக கடலை பொரி மாதிரி ஏதோ ஒரு தின்பண்டத்தை கையில வைச்சு புறாக்களை கவர்றது சாதாரணமா நடக்கிற விஷயம். அந்த முயற்சியில பாவம் இந்தப் பொண்ணுக்கும் புறாவுக்கும் ஏதோ பிரச்சனை ஆகி, அந்த புறா பொண்ணோட தோள் மேலெ உக்காந்து வில்லன் மாதிரி பாக்க, அந்த பொண்ணு வீல்’னு கத்த, அந்த பக்கமா பராக்கு பாத்திட்டு இருந்த நான் டப்புன்னு படம் புடிச்சிட்டேன்.

இந்த மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்கும் போது சில சமயம் CONTRAST, LIGHTING, COMPOSITION இதெல்லாம் பாக்க நேரம் இருக்காது. அதனால கிடைச்ச படத்தை கொஞ்சம் சுமாரான படமா தயார் பண்றதுக்கு கொஞ்சம் பிகாஸாவோட உதவியை எடுத்துகிட்டேன்.

TWO THIRDS rule படி ஒரு கட்டிங் (அதாங்க CROP), கொஞ்சம் CONTRAST, பொண்ணோட தோள்ல இருக்கற புறாவை மிகைப்படுத்து காமிக்க கொஞ்சம் 'SELECTIVE BLURRING' + extra HIGHLIGHTS சேத்தினேன். அம்புட்டு தான்.