Sunday, December 13, 2009

எஸ்கேப் வெலாசிட்டி - அப்படின்னா ?

சின்ன வயசில இருந்து எனக்கு ராக்கெட் விடறதுன்னா புடிக்கும். அட, தீபாவளி ராக்கெட் இல்லைங்க. நெசமான ராக்கெட். ஒரு பத்தாவது படிக்கும் போது தான், இந்த ராக்கெட் உடனும்னா என்ன படிக்கணும்னு தேட ஆரம்பிச்சேன். சத்தியமங்கலத்தில இருந்து தினமலர் பேப்பர் படிச்ச வரைக்கும், என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் தான். அப்புறம் பன்னிரண்டாவது முடிச்சு, கழுதை கெட்டு சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆனது வேற கதை.

இப்போ எல்லாம் இந்தியா PSLV/GSLV விடும் போதெல்லாம் கை தட்டிட்டு ஆஃபிஸ் கெளம்பி போறதோட சரி. இருந்தாலும் அப்பப்போ, இந்த விஞ்ஞானிகளுக்கெல்லா எப்படிடா இந்த மாதிரி சிந்தனை எல்லாம் தோணுது அப்படின்னு உள்ளுக்குள்ள ஒரு யோசனை இருந்துகிட்டே தான் இருக்கும். சரி, ஏதோ இஸ்கூல்ல படிச்சதில நமக்கு இன்னும் ஞாபகம் இருக்கற ஒரு விஷயத்தைத் தோண்டிப் பாப்போம்ன்னு ஆரம்பிச்சேன். அது இந்தப் பதிவில வந்து முடிஞ்சிருக்கு.

இப்போ மேட்டருக்கு வருவோம். நம்ம பூமியை விட்டு ஒரு ராக்கெட் வெளிய போகனும்னா, அதுக்கு நம்ம பூமியோட எஸ்கேப் வெலாசிட்டி (Escape Velocity) அப்படிங்கற வேகத்தில போனாத்தான் முடியும்னு அறிவியல் பாட புத்தகத்தில படிச்சிருப்பீங்க (அட, படிசிருக்கோங்க விடுங்க). இதை நமக்கு சொல்லிக் குடுத்தது, இப்படித்தான்

From wiki,
In physics, escape velocity is the speed at which the kinetic energy of an object is equal to its gravitational potential energy. It is commonly described as the speed needed to "break free" from a gravitational field, for example for a satellite or rocket to leave earth. The term escape velocity is actually a misnomer, as the concept refers to a scalar speed which is independent of direction.

இப்பவே கண்ணைக் கட்டுதா? எனக்கும் சின்ன வயசில அப்படித்தான் இருந்த மாதிரி ஞாபகம். இப்பவும் இந்த ஃபார்முலாக்கும் ராக்கெட் விடறதுக்கும் என்ன சம்பந்தம்னு புரியல. ஆனா, இந்த எஸ்கேப் வெலாசிட்டி அப்படிங்கற ஐடியா எப்படி சர் ஐஸக் ந்யூட்டனுக்கு வந்திச்சு அப்படின்னு பாத்தா, அட நாம கூட ஒரு ரூம் போட்டு யோசிச்சிருக்கலாமோ அப்படின்னு தோணுது. ந்யூட்டனோட சிந்தனையைப் பாருங்க.
ஒரு மலை மேலெ ஒரு பீரங்கியை (Canon) வைச்சு டுமீல்’னு சுட்டோம்னா, அந்த குண்டு ஒரு குறிப்பிட்ட தூரம் போய் விழுகுது. இன்னும் கொஞ்சம் சக்தி வாய்ந்த ஒரு பீரங்கியால சுட்டோம்னா, இன்னும் ரொம்ப தூரம் போய் விழுகுது. அப்போ ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ரிய பீரங்கியைக் கொண்டு போய் நம்ம பூமியோட உச்சியில வைச்சு பூமியோட ஈர்ப்பு விசையைத் (gravity) தாண்டி போற அளவுக்கு வேகமா சுட்டா , அந்த குண்டு பூமி மேலெ விழாம அப்படியே பூமியை விட்டு வெளியெ போய்டுமோ ?

அம்புட்டு தான். எஸ்கேப் வெலாஸிட்டியைக் கண்டுபிடிச்சாச்சு. ந்யூட்டனோட இந்த thought experiment'கு கேனன் பால் எஃபக்டு அப்படின்னு பேராம்.

சில சப்பை மேட்டர்ஸ் (trivia)
- பூமியோட எஸ்கேப் வெலாஸிட்டி 11.2 கிமீ/வினாடி, அதாவது ஒலியை விட 34 மடங்கு வேகம் (34 மாக்)
- பூமத்திய ரேகை(equator) கிட்ட எஸ்கேப் வெலாஸிட்டி கொஞ்சம் கம்மி (10.7 கிமீ/வினாடி). அதனால தான் மொட்டைமாடியில இருந்து ராக்கெட் விடாம, ஃப்ரெஞ்சு கயானா, ஸ்ரீஹரிகோட்டா’ன்னு தேடி தேடிப் போய் இந்தப் பெரிய ராக்கெட் எல்லாம் விடறாங்க.

நம்ம ராக்கெட் எல்லாம் கொஞ்சம் வேகம் கம்மியா கெளம்பினா என்ன ஆகும்னு இங்க போய் குண்டு போட்டு கூட பாத்துக்கலாம்
http://waowen.screaming.net/revision/force&motion/ncananim.htm

நம்ம ஸ்கூல்ல/காலேஜ்ல எல்லாம் எப்போ நமக்கு இந்த மாதிரி யோசிக்க சொல்லி குடுப்பாங்க ?? Atleast, ந்யூட்டன் இந்த மாதிரி தான் யோசிச்சார்னாவது சொல்லியிருக்கலாம்.