Saturday, January 17, 2009

சின்ன விஷயங்களை பெரிசு படுத்தறது எப்படி (MACRO Photography)

மேக்ரோ அப்படிங்கிற ஒரு ஐட்டம் சின்ன பசங்க வைச்சிருக்க கேமரால கூட இருக்கே, அந்த பூ போட்ட பொத்தானை அமுக்கிட்டு படம் எடுக்கறதுல என்ன பெருசா சொல்ல வந்திட்டான்னு நினைச்சீங்கன்னா நீங்க கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு(blog) இது.

SLR கேமராக்கள்ல மேக்ரோ’ன்னு அந்த சின்ன பூ போட்ட பட்டன் இருக்காது. கொஞ்சம் விசாரிச்சு பாத்தீங்கன்னா, அதுக்கு தனியா லென்ஸ் இருக்காம்லன்னு சொல்லியிருப்பாங்க. நானும் இதையெல்லா ரொம்ப நாளா படிச்சு பாத்திட்டு காசு செலவாகும் போல இருக்குன்னு ஃப்ரீயா விட்டுட்டேன். சமீபத்தில தான் SLR'ல மேக்ரோ படம் புடிக்கறதுக்கு $5'ல இருந்து $1000 வரைக்கும் பலப் பல விஷயங்கள் இருக்கறத தெரிஞ்சுகிட்டேன்.

மேக்ரோ ஃபோட்டோ எடுக்க பல டெக்னிக் இருந்தாலும் லென்ஸ்னு ஒன்னு வேணும். மேக்ரோ ஃபோட்டோ எடுக்க கண்டிப்பா மேக்ரோ லென்ஸ் அவசியமில்லை. அடிப்படையான, ஆனா தரமான ஒரு 50mm prime லென்ஸ் கூட போதும். நாம தேர்ந்தெடுக்கற லென்ஸோட focal length முக்கியம்.

உங்களோட சப்ஜெக்ட்டுக்கு எவ்வளவு பக்கத்தில போக முடியும்கிறதை பொருத்து, நீங்க லென்ஸோட focal length’தை தேர்ந்தெடுத்துக்கனும். 90mm/105mm கிட்டத்தட்ட எல்லா விஷயத்துக்கும் பயன்படற மாதிரியான focal length. ஒரு ரூமுக்கு உள்ளேயும் சரி, வீட்டுக்கும் வெளியேயும் சரி, நல்ல working distance கிடைக்கும். நீங்க புழு பூச்சி எல்லாம் படம் புடிக்கிற டைப் அப்படின்னா, அதுக்கு 200mm ரேஞ்சுல லென்ஸ் பாத்துக்கங்க.

அது போக லென்ஸ்ல பெரிய aperture, Nano-crystal coat, Extra low Dispersion(ED) glass elements, VR/IS எல்லாம் இருந்தா நல்லாத் தான் இருக்கும். சும்மா கத்துக்கறதுக்கு என்னோட சாய்ஸ் நிகான்’ல 50mm f1.8 D லென்ஸ். ஏன்னா,
1. குறைந்த விலை ($100)
2. நிறைந்த தரம் (இணையத்தில படிச்சு பாருங்க)
3. சூப்பர் ஷார்ப்
4. நல்ல காண்ட்ராஸ்ட்
5. 52mm thread (lens reversing rings பயன் படுத்தி லென்ஸை திருப்பி மாட்டக்கூடிய சைஸ்)
6. aperture ring (lens reversing rings பயன் படுத்தும் போது ரொம்ப முக்கியம்)
7. கைக்கு அடக்கமான எங்கேயும் எடுத்துட்டு போற மாதிரி சைஸ்
8. 1.8 max aperture - கத்துக்கறதுக்கு ரொம்பவே போதும்

முதல்ல இந்த மேக்ரோ ஃபோட்டோ எடுக்கறதுக்கு நாம் ஏன் கேமராவை ஸ்பெசலா கவனிக்கனும்னு பாப்போம். ஒவ்வொரு லென்ஸ்லெயும் MINIMUM FOCUSING DISTANCE அப்படின்னு ஒரு FACTOR இருக்கும். பொதுவா ஒரு 50mm லென்ஸ்ல அது 1.5 இன்ச் இருக்கும். இந்த 1.5 இன்சுக்கு முன்னாடி இருக்கற எந்த பொருளையும் நம்ம லென்ஸ்னால ஃபோகஸ் பண்ண முடியாது. மேக்ரோன்னா நல்லா பக்கத்தில போய் ஃபோகஸ் பண்ணி படம் புடிக்கணும். எங்கேயோ இடிக்குதா. அங்கே தான் இனி வரப் போற ஐட்டம் எல்லாம் கை கொடுக்கப் போகுது.

CLOSEUP ATTACHMENT LENS


இது கிட்டத்தட்ட UV ஃபில்டர் / POLARIZER மாதிரி சும்மா லென்ஸ் முன்னாடி மாட்டி படம் எடுக்கற சமாச்சாரம் தான். நண்பன் கிரண் ஸ்டைல்’ல சொல்லனும்னா பூதக்கண்ணாடி. இதுலேயே ஆட்டோமேடிக்கா ஃபோகஸ் பண்றதை நீங்க மறந்திடனும். உங்க லென்ஸ்’ல MANUAL ஃபோகஸ் ரிங் எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடிச்சு க்ளிக்கி பாருங்க. நம்ம AFS-C கேமரால வர்ற VIEWFINDER’ரோட லட்சணம் தெரியும். நிகானோட இந்த பூதக்கண்ணாடி $40 ஆகுது. உங்க லென்ஸோட thread சைஸுக்கு ஏத்த மாதிரி ஒன்னு வாங்கி மாட்ட வேண்டியதுதான்.

LENS REVERSING RINGS
இது கொஞ்சம் சுவாரஸ்யமான வகையறா. லென்ஸை வழக்கம் போல மாட்டாம திருப்பி மாட்டினா இன்னும் பக்கத்தில போய் ஃபோகஸ் பண்ண முடியும்’னு சொல்றாங்க. அட, இது நல்லா (மலிவா) இருக்கேன்னு நான் கூட நிகானோட BR-2A ரிங் வாங்கி படம் எடுத்துப் பாத்தேன். அந்தக் கதை தனி பதிவா இருக்கு.

கதைச்சுருக்கம் இங்கே
* லென்ஸை திருப்பி மாட்டினா அது ஆட்டோமேடிக்கா ஃபோகஸ் ஆகாது (பண்ண முடியாது இல்லைங்க.. ஆகவே ஆகாது). இன்னும் சுவாரஸ்யமான விஷயம், MANUAL ஃபோகஸும் ஆகாது. ஒரே வழி, கேமராவையோ இல்ல சப்ஜெக்டையோ முன்னப் பின்ன தள்ளி வைச்சுக்க வேண்டியது தான்.
* ஒரு நல்ல விஷயம். உங்களால ஷட்டர் ஸ்பீடு செட் பண்ண முடியும். ஆனா APERTURE’ரை கேமரா மூலமா செட் பண்ண முடியாது. ஆக கொஞ்சம் பழைய டைப் APERTURE ரிங் உள்ள லென்ஸ் இருந்தா உத்தமம். மேலும் விளக்கங்கள் இந்த இடுகையில.
* APERTURE செட் பண்ண முடியலேன்னா, EXPOSURE தவிர அடிபடக் கூடிய இன்னொரு விஷயம் Depth Of Field (DOF). APERTURE ரிங் இல்லேனா DEEP FOCUS மட்டுமே பண்ண முடியும். மேக்ரோல DOF நம்ம கையில இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

மத்தபடி பரிசோதனை பண்றதுக்கு ரொம்ப சுவாரஸ்யமாத் தான் இருந்திச்சு.

EXTENSION TUBES

இது தான் குறைந்த விலையில ($80 - $170) நிறைவா மேக்ரோ எடுக்கற வழி அப்படின்னு தோணுது. கேமராக்கும் லென்ஸுக்கும் நடுவில மாட்டி விடற ட்யூப் தான் எக்ஸ்டென்ஷன் ட்யூப். நல்ல MAGNIFICATION கிடைக்கும் போல இருக்கு. எவ்வளவுன்னு சரியா எங்கேயும் போடல.

இந்த EXTENSION TUBE’ல பெரிய மேட்டர் எதுவும் கிடையாது. F-Mount / EF-Mount’ல பொருந்தற மாதிரி ஒரு ப்ளாஸ்டிக் குழாய். என்ன, CPU லென்ஸை புரிஞ்சுக்கிற மாதிரி கொஞ்சம் HI-FI’யான குழாய். அவ்வளவு தான்.இந்த KENKO EXTENTION TUBES ஒன்னு வாங்கினா $75, மூணா வாங்கினா $170(12, 20 & 36mm Tubes).

இந்த EXTENSION TUBE’ல இரண்டு நல்ல விஷயம் இருக்கும். மேலெ இருக்கிற இந்த மூணையும் ஒன்னா சேத்தி கூட பெரிய EXTENTION TUBE’பா உபயோகிச்சுக்கலாம். அப்புறம் இது எல்லா F-Mount/EF-Mount லென்ஸோட வேலை செய்யும். இதுக்கும் ஸ்பெசலா வேற எதுவும் தேவையில்லை.

கவனமா பாக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம், ரொம்ப கனமான லென்ஸை இதுல கோர்த்து விட முடியாது. அது உங்க இ(க)ஷ்டம்.

BELLOWS


இந்த EXTENSION TUBE எல்லாம் லென்ஸை ஒரு 5-10cm முன்னாடி தள்ளி வைக்கும். அதுக்கும் பக்கத்தில போகனும்னா பெல்லோஸ் தேவைப்படும். கிட்டத்தட்ட பழைய காலத்து கருப்புத் துணி போத்தின ஃபோட்டோக்காரங்க மாதிரி இந்த செட்டப்பே ஒரு சைஸா இருக்கு. இருக்கறதிலேயே பெல்லோஸ்ல தான் அதிகப்படியான MAGNIFICATION கொண்டு வர முடியும். பொதுவா பெல்லோஸோட ரயில்’க்கு ட்ராக் போடற மாதிரி செட்டப் கிடைக்கும். இன்ச் இன்சா சப்ஜெக்ட்டுக்குப் பக்கத்தில ஆடாம அசையாம போய் அட்டகாசமா படம் புடிக்கலாம். இதுல AF கேமரா மாட்றதுக்கு ஒரு அடாப்டர், VERTICAL MOUNT அடாப்டர்னு எக்கச்சக்க லொட்டு லொசுக்கு ஐட்டம் இருக்கு.

இந்த பெல்லோஸ் யூனிட் (ரயிலோட சேத்தி) ஒரு $400 ஆகுது. இதுல சாதாரண லென்ஸ், அல்லது மேக்ரோ லென்ஸ், அல்லது சாதா/மேக்ரோ லென்ஸ் + லென்ஸ் ரிவர்ஸ் ரிங் வைச்சு படம் எடுக்கலாம்.

மேக்ரோ லென்ஸ்

காசு இருந்தா வாங்க வேண்டிய சமாச்சாரம். பேர்லயே இருக்கிற மாதிரி மேக்ரோ ஃபோட்டோக்ராஃபிக்காகவே பண்ற லென்ஸ் இது. இந்த மாதிரியான லென்ஸ் எல்லாமே கிட்டத்தட்ட 1:1 MAGNIFICATION தரும். சில மேக்ரோ லென்ஸ்ல பக்கத்துல போய் ஃபோகஸ் பண்றதுக்கு உதவியா FLOATING LENS ELEMENTS கூட இருக்கும். நிகான் இதை CLOSE RANGE CORRECTION(CRC) சிஸ்டம்’னு சொல்றாங்க. தவிர குறைஞ்சது f2.8 APERTURE-ராவது இருக்கும். அதனால SHALLOW DOF பிரச்சனையே இருக்காது. இந்த DOF'னாலேயே பல பேருக்கு மேக்ரோ லென்ஸை PORTRAIT லென்ஸா பயன்படுத்தறது பிடிக்கும்.

லென்ஸ்விலைMin focus distanceApertureRemarks
Tamron 90mm f2.8$4500.95 ft (29 cm)2.8-32Value for Money. $60 rebate available now
AF-S Micro-Nikkor 60mm f/2.8G ED Macro$5100.6 ft. (18.5cm)2.8-32Two versions with/without CRC
AF Micro-Nikkor 105mm f/2.8G ED-IF AF-S VR$9001.0 ft. (31.4cm)2.8-32Closeup speedlight support
AF Micro Nikkor 200mm f/4.0D ED-IF$16001.7 ft. (50 cm)4-32Great 10.2 inch working distance

பல பேர் 105mm Nikkor விட Tamron 90mm தான் உசத்தி அடிச்சு சொல்றதை படிச்சிருக்கேன். அதனால மேக்ரோக்குன்னு பட்ஜெட்டுக்குள்ள லென்ஸ் வாங்கிறதா இருந்தா Tamron 90mm நல்ல தேர்வு.

உங்களுக்கு மேக்ரோ லென்ஸும் நீங்க எதிர்பாத்த அளவுக்கு MAGNIFICATION தரலேன்னா, LENS REVERSING RING + BELLOWS கூட பயன் படுத்தலாம்.

இன்னும் விளக்கங்களுக்கு (http://www.nikonians.org/html/resources/nikon_articles/other/close-up_macro/macro_0.html)

Monday, January 12, 2009

கலோன் - ஜெர்மனி - ஐந்தாம் நாள் - PHOTOKINA - பாகம் 6

லென்ஸ் பேபி்யைப் பத்தி என்னொட பங்களூரு நண்பன் அமித் முன்னாடியே கதை கதையா சொல்லியிருக்கான். போட்டோகினால லென்ஸ் பேபி ஸ்டாலைப் பாக்கற வரைக்கும், அதை நேரில பாக்க வாய்ப்பு கிடைக்கல. உண்மையச் சொல்லனும்னா, இது ஐஞ்சு நிமிஷத்தில புரிஞ்சுகிட்டு படம் எடுக்கிற வஸ்து கிடையாது. லென்ஸ்னா வட்டமாத்தான் இருக்கனும்னு என்ன சட்டமா’னு இவங்க கொஞ்சம் வளைஞ்சு நெளியற மாதிரி ஒரு ஐட்டம் பண்ணி இருக்காங்க.

மேலெ நடுவில இருக்கறது தான் மாண்டில், இல்லை இல்லை லென்ஸ்பேபி லென்ஸ். இதை சாதாரணா லென்ஸ் மாதிரி நம்ம கேமரால மாட்டி போட்டோ புடிக்க வேண்டியது தான். வித்தியாசம் என்னன்னு மேலெ பாருங்க. முதல் படம் பொதுவா நமக்கு தெரிஞ்ச நேரான லென்ஸ் வைச்சு எடுத்தது. மூணாவது படம் லென்ஸ்பேபி வைச்சு எடுத்தது. போகஸ் ஆன அந்த SWEET SPOT'டைத் தவிர மத்த இடம் எல்லாம் வித்தியாசமா ஒரு எஃபெக்ட் குடுக்குதே, அதுக்காகத் தான் இந்த லென்ஸ் பேபி. விஷயம் தெரியாம படம் எடுக்க முயற்சி பண்ணினா கீழெ இருக்கற படம் மாதிரி ஆயிடும்.

இந்த மூணாவது படத்தில இருக்கற அக்கா தான் பொறுமையா எனக்கு இந்தா பேபியை எப்படி உபயோகிக்கறதுன்னு சொல்லிக் குடுத்தாங்க. முதல்ல, இதுல ஆட்டோஃபோகஸ் சமாச்சாரம் எல்லாம் கிடையாது. பொதுவா நம்ம D40/D70/D90/Xti கேமராக்ள்ல வர வ்யூஃபைண்டரை (VIEWFINDER) வச்சு MANUAL'லா போகஸ் பண்றது கஷ்டம். ஆக முதல் வாரம் கண்வலி நிச்சயம். அப்புறம் இதுல SWEET SPOT நடு சென்டர்ல இல்லாம ஃபிரேம்ல எங்க வேணும்னாலும் வைச்சிக்கலாம்கிறது பழக கொஞ்சம் நேரம் வேணும் போல இருக்கு.

விக்கிப்பீடியால இதை LENS + BELLOWS அப்படின்னு சிம்பிளா சொல்றாங்க. BELLOWS'னா EXTENSION TUBES அப்படின்னு படிச்சிருக்கேன். இது வரைக்கும் பயன்படித்தினதில்லை. அதனால உங்களுக்குத் தியரி வேணும்னா இங்க படிச்சுக்குங்க. ஆக, பைசா இருந்தா கண்டிப்பா முயற்சி செஞ்சு பாக்க வேண்டிய ஐட்டம் இது.


என்னடா சோனி ரொம்ப தீவிரமா டிஜிட்டல் கேமரா, SLR இதுல எல்லாம் இறங்கி இருக்காங்களே, அவங்க அட்ரஸே காணோம்னு பாத்தா, அவங்க கொஞ்சம் தள்ளி பக்கத்து அரங்கத்தை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுத்து வழக்கம் போல பிலிம் காட்டிட்டு இருந்தாங்க. இங்க நான் குறிப்பா பாக்க வந்தது சோனியோட A900 ஃபுல் ஃபிரேம் கேமரா.

நிகானோட சென்சர் எல்லாம் சோனி தான் செஞ்சு தரதா ரொம்ப நாளா ஒரு வதந்தி இருக்கு. தவிர சோனி தானா லென்ஸ் பண்ணாம CARL ZEISS’சோட சேர்ந்து பண்றதால சோனியோட A900 கிட்டத்தட்ட நிகான் கேமரா + CARL ZEISS மாதிரி இருக்குமோங்கிறது தான் என்னோட ஆர்வத்துக்குக் காரணம். தியரி எல்லாம் ஒத்து வந்தாலும், A900 + சோனியோட லென்ஸ் வரிசை எல்லாம் உபயோகிச்சுப் பாக்கும் போது அவங்க நிகான்/கேனனை எட்டிப் பிடிக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்னு தோணுது.

பக்கத்தில ஒலிம்பஸ் (OLYMPUS) கேமராவும் இருந்திச்சு. இவங்களும் MICRO FOUR THIRDS க்ரூப்ல இருக்கறதால புது கேமரா, லென்ஸ் எல்லாம் வைச்சிருந்தாங்க. ஆனா எனக்கு MICRO FOUR THIRDS கேமரா எல்லாம் டெஸ்ட் பண்ணி பாக்க நேரமோ ஆர்வமோ இல்லை. ஆனா அவங்க அங்க ஒரு குட்டி WIRELESS FLASH DEMO வைச்சிருந்தாங்க. அட, இது எப்படியிருக்குன்னு பாக்கலாம்னு களத்தில இறங்கினேன்.

இந்த போட்டோல இருக்கற அக்கா தான் அங்க மேற்பார்வை, மாடல் எல்லாம். அவங்க DEMO காமிக்க முயற்சி பண்ணினப்போ MURPHY's LAW படி, WIRELESS FLASH சொதப்பிடுச்சு. பல தடவை மன்னிப்பு கேட்டதால, பொழச்சு போகுதுன்னு விட்டேன் (ஓசியில வேடிக்கை பாக்க ஜெர்மனி வரைக்கும் போயிருக்கோம்ல:-). அப்புறம் இரண்டு மூணு படம் எடுத்துப் பாத்தேன். ரொம்ப சொல்லிக்கற மாதிரி எதுவும் இல்லை. என்னோட $160 SB600’டே தேவலாம். இன்னொரு தபா ஒலிம்பஸ் FLASH'ஷைத் தேடி போவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.


ஜெர்மனில போட்டோ கண்காட்சிக்கு வந்திட்டு ZEISS லென்ஸைப் பாக்காம இருக்க முடியுமா. உலகமே ஆட்டோபோகஸ், VIBRATION REDUCTION அப்படின்னு புதுசு புதுசா பல விஷயங்களை கொண்டு வந்தாலும், CARL ZEISS $1000’க்கு MANUAL FOCUS லென்ஸ் தான் பண்ணுவேன்னு அடம் புடிக்கற டைப். CARL ZEISS லென்ஸ்ல அப்படி என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்க ரொம்ப நாளா ஒரு அவா.

அங்க இருந்த D200'ல ஒரு 20mm f2.0 ZEISS MF லென்ஸை மாட்டி அங்க இருந்த பூ, செடி கொடி, அப்புறம் பக்கத்தில இருந்த மனுசங்களை எல்லாம் படம் எடுத்துப் பாத்தேன். நானும் எத்தனை நேரம் தான் MANUAL FOCUS’ல படம் எடுக்கத் தெரிஞ்ச மாதிரி நடிக்கறது. முடியலை. கண்வலியோட காத்து வரட்டும்னு கெளம்பிட்டேன்.

அப்படியே போற வழியில TOKINO’வோட, 12-24 f4 DX லென்ஸ் (நிகான் F MOUNT) பாத்தேன். அப்படியே என்னோட D70s’ல சொருகி, அந்த கடையில இருந்த்வங்களையே படம் எடுத்துப் பாத்தேன். படம் ரொம்ப நல்லா வந்திச்சு. DX ஃபார்மேட்ல WIDE ANGLE லென்ஸ் தேவைன்னா கண்டிப்பா இது நல்ல சாய்ஸ். அப்புறம் இந்த முதல் ஃபோட்டோல இருக்கற அக்கா சாதாரணமாவே அப்படித் தான் பாக்கறாங்க. என்னை முறைக்கிறாங்கன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.

கிட்டத்தட்ட வந்த வேலை முடிஞ்சதால, அப்ப்படியே கண்ணுல பட்ட சில RANDOM காட்சிகள் இங்கே. இந்தக் காரை எதுக்கு வைச்சிருந்தாங்கன்னு தெரியலே. ஆனா PORCHE ஆச்சே, அதனால விட முடியல.

இந்த சைஸ்ல எல்லாம் எதுக்கு TRIPOD பண்ணுவாங்கன்னு தெரியல. இந்த TRIPOD'டை GROUND FLOOR’ல வைச்சிட்டு, FIRST FLOOR’ல இருந்தே ஃபோட்டோ எடுக்கலாம் போல இருக்கு. இதுல கூடவே ஒரு ஏணியும் வைச்சிருந்தாங்கன்னா வசதியா இருக்குமோ ?

MONOPOD, TRIPOD அப்படின்னு கேள்விப்பட்டு இருப்பீங்க. GORILLAPOD எப்படி? OUT OF THE BOX THINKING அப்படின்னு சொல்லுவாங்களே, அது இது தான். எங்க வேணும்னாலும் வளைஞ்சு நெளிஞ்சு மாட்டக்கூடிய FLEXIBLE'லான POD இது. செல்ஃபோன்ல இருந்து SLR கேமரா + பெரிய லென்ஸ், வீடியோ கேமரான்னு ஐஞ்சு கிலோ வரைக்கும் தாங்கற மாதிரி நல்லா வடிவமைச்சிருக்காங்க. இன்னும் தெரிஞ்சுக்க இங்க தாவுங்க.

கொஞ்சம் தள்ளி வித்தியாசமா ஒரு மாடலை பெயிண்ட் அடிச்சு, பெயிண்ட் அடிச்சு ஃபோட்டோ எடுத்திட்டு இருந்தாங்க. ஃபோட்டோகிராஃபர்னு வெறும் ஒளி ஓவியம் மட்டும் வரையாம, இவரு லைட்டிங் எல்லாம் செட்டப் பண்ணிட்டு பொறுமையா LIVE'வா வரைஞ்சு ஃபோட்டோ எடுத்திட்டு இருந்தாரு. இருந்தாலும் அந்த மாடல் அம்மாக்கு பொறுமை ரொம்பவே ஜாஸ்தி. மணிக்கணக்கா பெயிண்டை வாங்கிட்டு சிரிச்சுகிடே போஸ் குடுத்துட்டு இருக்கறது சாதாரண விஷயமா?

இங்க தான் எல்லாரும் ஃபோட்டோ எடுக்கறதுக்குன்னே போஸ் குடுத்துட்டு இருக்காங்களேன்னு ஒரு PORTRAIT STUDIO மாதிரி இருந்த கடையில ஃபோட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருந்தப் பொண்ணை நானும் ஒரு ஃபோட்டொ எடுத்தேன். அலைபாயுதே’ல மாதவன் உண்டை வாங்கற மாதிரி ஒரு பெரிசு என்கிட்ட வந்து, அது என் பொண்ணு அப்படின்னு சொல்ல, நான் மனசிலேயே தங்கச்சி செண்டிமெண்ட் கதை ஒன்னு ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் அந்த பெரிசு, சும்மா தமாசுக்குச் சொன்னேன்னு கண் அடிக்க எனக்கு உசிரே வந்திச்சு.

ஃபோட்டோகினா (PHOTOKINA) பற்றிய இந்த சிற்றுரைய (!) இதோட முடிச்சிக்கறேன். நீங்க என்னை விட பொறுமைசாலியா இருந்தீங்கன்னா, ஃபோட்டோகினா பத்தின ஆறு பதிப்பையும் படிச்சு பாருங்க. அடுத்த தடவையில இருந்து கொஞ்சம் சின்ன பதிப்பா எழுத முயற்சி பண்றேன். இப்படியே சும்மா படிச்சிட்டே இருந்தா எப்படி, அப்படியே உங்க பொன்னான கருத்தையும் கமெண்டா செதுக்கீட்டு போங்க.

நன்றி! வணக்கம்!!


Friday, January 9, 2009

கலோன் - ஜெர்மனி - ஐந்தாம் நாள் - PHOTOKINA - பாகம் 5


என்னடா கேனன், நிகான் இப்படி பெரிய பெரிய கேமரா பத்தி எல்லாம் பேசிட்டு இருக்கும் போது புதுசா HASSELBLAD, MAMIYA அப்படின்னு கரடி விடறானேன்னு பாக்கறீங்களா. இந்த HASSELBLAD, MAMIYA எல்லாம் நிகான், கேனன் கேமராக்களை விட உசத்தி. எப்படின்னு கேக்கறீங்களா, மேலெ படிங்க.

என்னும்டைய மற்றுமொரு பதிப்புல சொன்ன மாதிரி, இந்தா ஃபுல் ஃப்ரேம் சென்சர்க்கு மேலெ மீடியம் ஃபார்மேட் சென்சர்னு ஒரு சைஸ் இருக்கு. நம்ம அண்ணா சாலை’ல பெரிய பெரிய போஸ்டர் எல்லாம் இருக்குமே, அந்த சைஸ்ல போட்டோ ப்ரிண்ட் பண்ணனும்னா, இந்த மாதிரி மீடியம் ஃபார்மேட் கேமராக்கள்ல எடுக்க வேண்டி இருக்கும்.

சென்சர் சைஸ் தவிர, இவங்களோட லென்ஸ் மற்றும் படத்தோட தரம் இதெல்லாம் நமக்கு ரொம்ப ஓவரா இருக்கும். உதாரணத்துக்கு HASSELBLAD'டோட தரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டை இங்க பாருங்க (http://www.hasselbladusa.com/products/virtual-demo-overview/hasselblad-image-quality/resolution.aspx). 39 மெகா பிக்ஸ்ல் படத்தை எம்புட்டு தடவை ஜூம் பண்ணினாலும் படம் சும்மா பளிங்கு மாதிரி பளபளன்னு இருக்கும்.


இந்த HASSELBLAD அரங்கத்தில பல சுவாரசியமான விஷயங்கள் இருந்திச்சு. முதல்ல அவங்களோட போட்டோ ஷூட். இரண்டு மாடல், ஒரு மேக்கப் உமன், ஒரு போட்டோகிராஃபர், 30” ஸ்கிரீன்’ல ’போகஸ்’ சாஃப்ட்வேர்ல ப்ரிவியூ. இங்க கிட்டத்தட்ட அந்த போட்டோகிராஃபருக்குப் பின்னாடியே நின்னு போட்டோ எடுக்கற அளவுக்கு இடம் இருந்த்தால, நானே மானசீகமா என்னோட நிகான் D70s'க்கும் HASSELBLAD'க்கும் போட்டி வைச்சிகிட்டேன். நானும் செட்டிங்ஸை மாத்தி மாத்தி எடுத்துப் பாக்கறேன், என்னோட குட்டி ஸ்கிரீன்ல வர்ற படத்துக்கும் அந்த பெரிய ஸ்கிரீன்ல வர்ற படத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசம். கீழெ பாருங்க. முதல் படம் அவர் எடுத்தது. அடுத்து நான் என்னோட கேமரால எடுத்தது எடுத்தபடி. மூணாவது படம் இரண்டாவது படத்தை கிம்ப் பண்ணின பிறகு.
ஒரு சோப்பு விளம்பரத்தில வர மாதிரி, என் சட்டை அவர் சட்டைய விட வெளுப்பான்னு கடுப்பா வந்திச்சு. தோல்வியை ஒத்துக்க முடியாம பக்கத்தில இருந்த ஆங்கிலம் தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட கேட்டுட்டேன். அவர் அந்த போகஸ்’ங்கிற சாஃப்ட்வேர்ல ஏற்கனவே background கலர்ல இருந்து tone செட்டிங்ஸ் வரைக்கும் எல்லாம் செட் பண்ணிட்டு எடுத்தா நமக்கும் அப்படி வரும்னு சொன்னப்புறம் தான், போனாப் போகுதுன்னு விட்டேன். அங்க கிடைச்ச கேப்ல எடுத்த படங்களை கொஞ்சம் கிம்ப் பண்ணின பிறகு, ஒரு 25% அதே மாதிரி tone'ல படத்தைக் கொண்டு வர முடிஞ்சதுக்கே கிடா வெட்டி கொண்டாடலாம் போல இருந்திச்சு.

அந்த ஏரியால HASSELBLAD கேமராவக் கையில குடுத்து போட்டோ எடுத்துப் பாருங்கன்னு ஒரு ஸ்டால்ல சொல்லிகிட்டு இருந்தாங்க. ஆஹா, கரும்பு தின்னக் கசக்குமா, வாங்கி ஒரு கை பார்த்தேன். இங்க முதல் படத்தில இருக்கற மாதிரி உத்து உத்துப் பாத்தாலும் ரொம்ப ஸ்பெசலா எதுவும் தெரியல. ஆனா படமா பாக்கும் போது வித்தியாசம் கண்டிப்பா தெரியுது. அங்க பனி பெய்யற மாதிரி ஒரு சின்ன அரங்கத்தில ஒரு மாடலுக்கு கிமோனாவை மாட்டி விட்டு போட்டோ புடிச்சிட்டு இருந்தாங்க. அங்க நான் எடுத்து கிம்ப்’னது மேலெ மூணாவதா இருக்கிறது.


பக்கத்திலேயெ MAMIYA’வும் கடையப் போட்டிருந்தாங்க. HASSELBLAD மாதிரி பந்தா எல்லாம் இல்லாம சிம்பிளா ஒரே ஒரு ஸ்டால் போட்டிருந்தாங்க. சரி இவங்க கிட்ட சரக்கு கம்மி போல இருக்குன்னு ரெண்டு போட்டோ மட்டும் எடுத்திட்டு கிளம்பிட்டேன். ஒரு நல்ல விஷயம். MAMIYA’ல நம்ம கார்டைப் போட்டு JPEG’ல படம் புடிச்சிக்கலாம். HASSELBLAD'ல ராவா(RAW)த்தான் படம் புடிக்கனும், அதையும் அவங்க போகஸ் சாஃப்ட்வேர் வைச்சு தான் பாக்கவே முடியும்.

வீட்டுக்கு வந்து படிச்சா, MAMIYA’வும் கொஞ்சம் பெரிய ஆளுங்க தான் போல இருக்கு. இந்தா MAMIYA கேமராவை இரண்டா பிரிச்சு ஃபிலிம் இல்லை டிஜிட்டல் எப்படி வேணும்னாலும் பயன்படுத்தற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. டிஜிட்டல் கேமரா மட்டும் பண்றதுக்கே பல கம்பெனிங்க டப்பா டான்ஸ் ஆடுது. இவங்க மீடியம் ஃபார்மேட்ல டிஜிட்டல்லேயும் படம் எடுப்பாங்களாம், ஃபிலிம்லேயும் படம் எடுப்பாங்களாம். எல்லாம், எங்கிருந்து தான் வருவாங்களோ. மேலெ தெரிஞ்சுக்க இதைக் க்ளிக்குங்க.

தலைவர் பாணில சொல்லனும்னா, LAST BUT NOT THE LEAST .. லென்ஸ் பேபியைப் (LENS BABY), கொரில்லாபாட் (GORILLAPOD) பத்தி எல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா ? இல்லைன்னா அடுத்தப் பதிவுக்குத் தாவுங்க.