Friday, January 9, 2009

கலோன் - ஜெர்மனி - ஐந்தாம் நாள் - PHOTOKINA - பாகம் 5


என்னடா கேனன், நிகான் இப்படி பெரிய பெரிய கேமரா பத்தி எல்லாம் பேசிட்டு இருக்கும் போது புதுசா HASSELBLAD, MAMIYA அப்படின்னு கரடி விடறானேன்னு பாக்கறீங்களா. இந்த HASSELBLAD, MAMIYA எல்லாம் நிகான், கேனன் கேமராக்களை விட உசத்தி. எப்படின்னு கேக்கறீங்களா, மேலெ படிங்க.

என்னும்டைய மற்றுமொரு பதிப்புல சொன்ன மாதிரி, இந்தா ஃபுல் ஃப்ரேம் சென்சர்க்கு மேலெ மீடியம் ஃபார்மேட் சென்சர்னு ஒரு சைஸ் இருக்கு. நம்ம அண்ணா சாலை’ல பெரிய பெரிய போஸ்டர் எல்லாம் இருக்குமே, அந்த சைஸ்ல போட்டோ ப்ரிண்ட் பண்ணனும்னா, இந்த மாதிரி மீடியம் ஃபார்மேட் கேமராக்கள்ல எடுக்க வேண்டி இருக்கும்.

சென்சர் சைஸ் தவிர, இவங்களோட லென்ஸ் மற்றும் படத்தோட தரம் இதெல்லாம் நமக்கு ரொம்ப ஓவரா இருக்கும். உதாரணத்துக்கு HASSELBLAD'டோட தரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டை இங்க பாருங்க (http://www.hasselbladusa.com/products/virtual-demo-overview/hasselblad-image-quality/resolution.aspx). 39 மெகா பிக்ஸ்ல் படத்தை எம்புட்டு தடவை ஜூம் பண்ணினாலும் படம் சும்மா பளிங்கு மாதிரி பளபளன்னு இருக்கும்.


இந்த HASSELBLAD அரங்கத்தில பல சுவாரசியமான விஷயங்கள் இருந்திச்சு. முதல்ல அவங்களோட போட்டோ ஷூட். இரண்டு மாடல், ஒரு மேக்கப் உமன், ஒரு போட்டோகிராஃபர், 30” ஸ்கிரீன்’ல ’போகஸ்’ சாஃப்ட்வேர்ல ப்ரிவியூ. இங்க கிட்டத்தட்ட அந்த போட்டோகிராஃபருக்குப் பின்னாடியே நின்னு போட்டோ எடுக்கற அளவுக்கு இடம் இருந்த்தால, நானே மானசீகமா என்னோட நிகான் D70s'க்கும் HASSELBLAD'க்கும் போட்டி வைச்சிகிட்டேன். நானும் செட்டிங்ஸை மாத்தி மாத்தி எடுத்துப் பாக்கறேன், என்னோட குட்டி ஸ்கிரீன்ல வர்ற படத்துக்கும் அந்த பெரிய ஸ்கிரீன்ல வர்ற படத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசம். கீழெ பாருங்க. முதல் படம் அவர் எடுத்தது. அடுத்து நான் என்னோட கேமரால எடுத்தது எடுத்தபடி. மூணாவது படம் இரண்டாவது படத்தை கிம்ப் பண்ணின பிறகு.
ஒரு சோப்பு விளம்பரத்தில வர மாதிரி, என் சட்டை அவர் சட்டைய விட வெளுப்பான்னு கடுப்பா வந்திச்சு. தோல்வியை ஒத்துக்க முடியாம பக்கத்தில இருந்த ஆங்கிலம் தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட கேட்டுட்டேன். அவர் அந்த போகஸ்’ங்கிற சாஃப்ட்வேர்ல ஏற்கனவே background கலர்ல இருந்து tone செட்டிங்ஸ் வரைக்கும் எல்லாம் செட் பண்ணிட்டு எடுத்தா நமக்கும் அப்படி வரும்னு சொன்னப்புறம் தான், போனாப் போகுதுன்னு விட்டேன். அங்க கிடைச்ச கேப்ல எடுத்த படங்களை கொஞ்சம் கிம்ப் பண்ணின பிறகு, ஒரு 25% அதே மாதிரி tone'ல படத்தைக் கொண்டு வர முடிஞ்சதுக்கே கிடா வெட்டி கொண்டாடலாம் போல இருந்திச்சு.

அந்த ஏரியால HASSELBLAD கேமராவக் கையில குடுத்து போட்டோ எடுத்துப் பாருங்கன்னு ஒரு ஸ்டால்ல சொல்லிகிட்டு இருந்தாங்க. ஆஹா, கரும்பு தின்னக் கசக்குமா, வாங்கி ஒரு கை பார்த்தேன். இங்க முதல் படத்தில இருக்கற மாதிரி உத்து உத்துப் பாத்தாலும் ரொம்ப ஸ்பெசலா எதுவும் தெரியல. ஆனா படமா பாக்கும் போது வித்தியாசம் கண்டிப்பா தெரியுது. அங்க பனி பெய்யற மாதிரி ஒரு சின்ன அரங்கத்தில ஒரு மாடலுக்கு கிமோனாவை மாட்டி விட்டு போட்டோ புடிச்சிட்டு இருந்தாங்க. அங்க நான் எடுத்து கிம்ப்’னது மேலெ மூணாவதா இருக்கிறது.


பக்கத்திலேயெ MAMIYA’வும் கடையப் போட்டிருந்தாங்க. HASSELBLAD மாதிரி பந்தா எல்லாம் இல்லாம சிம்பிளா ஒரே ஒரு ஸ்டால் போட்டிருந்தாங்க. சரி இவங்க கிட்ட சரக்கு கம்மி போல இருக்குன்னு ரெண்டு போட்டோ மட்டும் எடுத்திட்டு கிளம்பிட்டேன். ஒரு நல்ல விஷயம். MAMIYA’ல நம்ம கார்டைப் போட்டு JPEG’ல படம் புடிச்சிக்கலாம். HASSELBLAD'ல ராவா(RAW)த்தான் படம் புடிக்கனும், அதையும் அவங்க போகஸ் சாஃப்ட்வேர் வைச்சு தான் பாக்கவே முடியும்.

வீட்டுக்கு வந்து படிச்சா, MAMIYA’வும் கொஞ்சம் பெரிய ஆளுங்க தான் போல இருக்கு. இந்தா MAMIYA கேமராவை இரண்டா பிரிச்சு ஃபிலிம் இல்லை டிஜிட்டல் எப்படி வேணும்னாலும் பயன்படுத்தற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. டிஜிட்டல் கேமரா மட்டும் பண்றதுக்கே பல கம்பெனிங்க டப்பா டான்ஸ் ஆடுது. இவங்க மீடியம் ஃபார்மேட்ல டிஜிட்டல்லேயும் படம் எடுப்பாங்களாம், ஃபிலிம்லேயும் படம் எடுப்பாங்களாம். எல்லாம், எங்கிருந்து தான் வருவாங்களோ. மேலெ தெரிஞ்சுக்க இதைக் க்ளிக்குங்க.

தலைவர் பாணில சொல்லனும்னா, LAST BUT NOT THE LEAST .. லென்ஸ் பேபியைப் (LENS BABY), கொரில்லாபாட் (GORILLAPOD) பத்தி எல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா ? இல்லைன்னா அடுத்தப் பதிவுக்குத் தாவுங்க.

No comments:

Post a Comment