Tuesday, November 11, 2008

கலோன் - ஜெர்மனி - ஐந்தாம் நாள் - PHOTOKINA - பாகம் 2


கேனனோட பகுதிக்குப் பக்கத்திலேயே பானசோனிக் (PANASONIC) ஒரு பெரிய கடைய போட்டிருந்தாங்க. தெரியாதவங்களுக்குச் சொல்றேன். பானசோனிக், ஒலிம்பஸ் இரண்டு பேரும் சேர்ந்து MICRO FOUR THIRDS அப்படின்னு புதுசா ஒரு சிஸ்டம் கொண்டு வந்துருக்காங்க. இந்த வகையில பானாசோனிக்கோட முதல் கேமரா LUMIX G1. விலை, படத்தோட தரம், INTERCHANGABLE LENS, கண்ட்ரோல்ஸ் எல்லாம் வைச்சுப் பார்க்கும் போது சாதா POINT&SHOOT கேமராவ விட உசத்தியாவும், அதே சமயத்தில SLR கேமராக்களுக்கு ஒரு ரேஞ்சு குறைவாவும் இருக்கற மாதிரி இதை வடிவமைச்சுருக்காங்கன்னு தோணுது. இருக்கற டெக்னாலஜி பத்தாம இதென்ன இடையிலன்னு கேக்கறீங்களா? முக்கி முக்கி விக்கியைப் படிச்சதுல, எனக்குப் புரிஞ்சதை எளிமையா சொல்றேன்.கேமரா சென்சர்கள் ஒரு நாலஞ்சு ரகத்தில இருக்கு. MEDIUM FORMAT, LARGE FORMAT சென்சரை எல்லாம் நாம இந்த ஆட்டத்தில சேத்திக்கல. 35MM ஃபிலிம்ல எம்புட்டு அகலமா பெருசா படம் புடிக்க முடியுமோ, அம்புட்டு பெருசா டிஜிட்டல்லியும் புடிக்க முடியனும்னா முதல்ல இருக்கற மாதிரி ஒரு FULL FRAME சென்சர் வேணும். இல்லேன்னா, கீழெ படத்தில இருக்கற மாதிரி முக்கால்வாசி படம் தான் எடுக்க முடியும். டிஜிட்டல் கேமரால எல்லாம் ஏதாவது ஒரு ஓரத்துல 1.6x, 1.5x, 1.4x CROP FACTOR ஆப்படின்னு போட்டிருப்பாங்களே, அது சென்சர் எவ்வளவு சின்னதுங்கறத குறிக்கறது தான்.

டிஜிட்டல் கேமரா மார்க்கட்டுக்கு வந்த போது, அவங்களால ஃபிலிம் கேமரால இருந்த 35MM ஃபிலிம் சைஸுக்கு படம் புடிக்கற மாதிரி சென்சர் தயாரிக்கறது கட்டுபடியாகல. அதனால 35MM'ல ஒரு முக்காவாசி அளவுக்கு மட்டும் படம் புடிக்கற மாதிரி கொஞ்சம் சின்ன சென்சரா பண்ண டிஜிட்டல் கேமரா விலை குறைஞ்சு மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பிச்சுது. ஆரம்பத்துல வந்த நிகானோட D70'ல இருந்து D300 வரைக்கும், கேனனோட டிஜிட்டல் ரெபல் (REBEL)'ல இருந்து 30D வரைக்கும் எல்லாமே இந்த்க் குட்டி சென்சாரோட வந்த கேமராக்கள் தான் (அப்படியே எல்லா POINT & SHOOT கேமராக்களையும் சேர்த்துக்கங்க).

சென்சர் சின்னதா இருந்தா பல பிரச்சனைகள் வரும். WIDE ANGLE வேணும்னா 10-12 MM வரைக்கும் போக வேண்டி வரும். பிக்சல் எல்லாம் நெருக்கமா இருக்கறதால ISO அதிகம் பண்ணினா GRAINS நிறைய தெரியும். தவிர DOF (Depth of Field) ரொம்ப ஜாஸ்தியாகி, நீங்க எதையெல்லாம் OUT OF FOCUS'ல மறைக்கப் பாக்கறீங்களோ, அது எல்லாம் நல்லா பளிச்சுனு தெரிஞ்சு இருக்கற கொஞ்ச நஞ்ச கிரியேடிவிட்டியையும்(!) மறக்கடிச்சிடும். ஆனா இனி எதிர்காலம் FULL FRAME SENSORS தான். அதனால கவலைப்பட வேண்டியதில்ல (இதெல்லாம் தெரியாமயே சந்தோசமாத் தானடா இருந்தோம் அப்படின்னு நீங்க நினைக்கறது எனக்குப் புரியுது :-)

SLR கேமரான்னு (ஃபிலிம்/டிஜிட்டல்) நமக்குத் தெரிஞ்சது எல்லாம் FOUR THIRDS வகையச் சேர்ந்தது. மேலெ படத்தில இருக்கற மாதிரி இந்த வகை கேமராக்கள்ல சென்சர் கொஞ்சம் பெரிசு. SLR'னு வகைப் படுத்தற கேமரா எல்லாத்திலயும் நாம கண்ணை சுருக்கிட்டு அந்த VIEWFINDER வழியா பாக்கற காட்சி, லென்ஸ் வழியா வந்து ஒரு கண்ணாடில விழுந்து அப்பாலைக்கா ஒரு PENTAPRISM வழியா MULTIPLE INTERNAL REFLECTION ஆகி கடைசியா நம்ம கண்ணுக்குத் தெரியுது. இப்படி காமிக்கற காட்டிய அப்படியே படம் புடிக்க முடியும்கறது தான் SLR'ரோட சிறப்பு (WHAT YOU SEE IS WHAT YOU GET). அது போக SLR கேமராக்கள் எல்லாம் பொதுவா 3:2 ASPECT RATIO'ல படம் புடிக்கும்.

MICRO FOUR THIRDS'ல குறிப்படும்படியான வித்தியாசம் என்னன்னா, SLR'ல இருக்கற MIRROR & PENTA PRISM இதுல கிடையாது. அதனால இந்த கேமராவே ரொம்ப சின்னதா, கைக்கு அடக்கமா பண்ண முடியும். தவிர இது 4:3 ASPECT RATION'ல தான் படம் புடிக்கும். அநேகமா இதுவும் 100% VIEWFINDER கவரேஜ் இருக்காதுன்னு நினைக்கறேன். நீங்க PRO மாதிரி சீன் போட்டிட்டு VIEWFINDER மட்டும் பாத்திங்கன்னா, ஒரு குத்து மதிப்பா இது தான் போட்டோல வரப் போகுதுன்னு சாமியை வேண்டிகிட்டு போட்டோ புடிக்க வேண்டியது தான். இதுக்கு தேவையான குட்டி சைஸ் லென்ஸ் எல்லாம் பானசோனிக்கும்(அதாவது LEICA) ஒலிம்பஸூம் மட்டும் பண்றாங்க.

POINT&SHOOT'ல இருந்து SLR'க்கு தாவும் போது நிறைய பேர் SLR ரொம்ப கடினமா இருக்கறதாவும் அந்த அளவுக்கு கன்ட்ரோல்ஸ் எல்லாம் தேவை இல்லை'னும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். அவங்களுக்கு INTERCHANGEABLE LENS + நிறைய கண்ட்ரோல்ஸ் இருக்கற LUMIX G1 மாதிரியான கேமராக்கள் பொருந்தும்னு எனக்குத் தோணுது. நிகான், கேனன் இப்போ சோனி இவங்களோட எல்லாம் போட்டி போடறதை விட பானசோனிக் மற்றும் ஒலிம்பஸுக்கு இது நல்ல தேர்வுங்கறது என்னோட சிறுபிள்ளைத் தனமான கருத்து.


அறிமுக விழாங்கிறதால LUMIX G1 பத்தி நிறைய கதை விட்டுட்டு இருந்தாங்க. அங்க என்னைக் கவர்ந்தது, அவங்களோட ஸ்கிரீன். சும்மா பளிங்கு மாதிரி பளபளன்னு அசத்தலா இருந்திச்சு.


மேலெ இருக்கற போட்டோல ஒருஅம்மணி இங்க பார்த்திட்டு இருக்கறதுக்கு தான் UNDERWATER CASE. தண்ணிக்கு அடியில போய் கலர் கலரா COREL REAFS, மீன் எல்லாம் படம் புடிக்கறதுக்கு உபயோகப்படுத்தறது. இதுல இரண்டாவது போட்டோவ கொஞ்சம் பெரிசு பண்ணி பாத்தீங்கன்னா, முழு விவரமும் புரியும். இந்த கேஸை ஒரு குறிப்பிட்ட கேமராவுக்குத் தான் பயன்படுத்த முடியும். ஏன்னா, அந்த கேமரால இருக்கற எல்லா பொத்தானுக்கும், அதே இடத்தில இந்த UNDERWATER CASE'லெயும் பொத்தான்கள் இருக்கு. இந்த கேஸ் எல்லாம் இல்லாமக் கூட சில கேமராக்களை அப்படியே தண்ணிக்குள்ள முக்கியும் போட்டோ எடுக்கலாம். மேலெ மூணாவது படத்துல இருக்கறது அந்த மாதிரியான ஒரு கேமரா. அதை உபயோகப் படுத்தி பாக்கறதுக்கு ஒரு தண்ணி தொட்டி வைச்சுருந்தாங்க பாருங்க. அடடா.

இங்க சைடுல இருக்கற ஐட்டத்தப் பார்த்த உடனே எனக்கு ஏனோ PHYSICS லேப் ஞாபகத்துக்கு வந்துச்சு. பக்கத்தில போய் பார்த்தா பழைய தமிழ் படத்தில வில்லன் ஹீரோவைக் கொடுமைப் படுத்தற மாதிரி, ஒரு ஒலிம்பஸ் கேமராவ ஒரு கன்வேயர் பெல்ட் கீழெ போட்டு போட்டு எடுத்திட்டு இருந்திச்சு. காடு, மலை, கடல் எங்க வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்தக் கூடிய ஸ்பெசல் கேமராவாம் இது. அந்த விளம்பர யுக்தி எனக்குப் புடிச்சிருந்தது.அடுத்து EPSON/CANON'னோட ப்ரிண்டிங் பகுதி. பிரிண்டிங்'னா ஏதோ 4x6, 8x12 எல்லாம் பண்ணாம, முரட்டுத்தனமா சினிமா போஸ்டர் சைஸுக்கு பிரிண்டு பண்ணிகிட்டு இருந்தாங்க. நத்தை மாதிரி பொறுமையா பிரிண்டு பண்ணினாலும் சரக்கு படு சுத்தம். அங்க ஏற்கனகே பிரிண்டு பண்ணின சில படங்களை சும்மா பாத்திட்டு மட்டும் வர முடியல. அப்படியே அள்ளிகிட்டு வந்திட்டேன்.


இங்க இருக்கறதிலேயே என்னோட FAVOURITE முதல்ல இருக்கற படம் தான். இப்படிக் கூட லைட்டிங் பண்ண முடியுமான்னு என்னை அசர வைச்ச போட்டோ. இங்க இருக்கற ஒவ்வொரு போட்டோவும் ஒரு கதை சொல்ற மாதிரி வாழ்க்கையில ஒரு போட்டாவாவது புடிக்கணும் :-)

இப்படி ஒரு இடம் நெஜமாவே இருக்கா, இல்ல PHOTOSHOP பண்ணினாங்களான்னு தெரியல. எப்படி இருந்தாலும் வல்லியக் கற்பனை.


கையில நிகானை வைச்சுகிட்டு கேனன்’கு அலைஞ்ச கதையா, நானும் சுத்தி சுத்தி கடைசியில நிகான் இருக்கற பகுதிய ஒரு வழியா கண்டு புடிச்சேன். அந்த கதைய படிக்க அடுத்தப் பாகத்துக்கு வாங்க.

1 comment:

  1. innaiki thaan i was reading about exposure.. mirror.. prisim n all... able to visualize everything as i read on... nalla yezhudhara...

    ReplyDelete