Monday, November 10, 2008

கலோன் - ஜெர்மனி - ஐந்தாம் நாள் - PHOTOKINA - பாகம் 3

அடுத்து நம்ம பேட்டையான நிகானோட பக்கம் போனேன். நிகானோட பகுதியில முதல்ல கண்ல பட்டது, வட்டமான மேஜை, அதுல சுத்தியும் கேமரா-லென்ஸ்னு நம்ம சரக்கு. மளிகை கடையில கேக்கற மாதிரி, அண்ணே D3 கேமரா ஒன்னு 85MM F1.4 லென்ஸ் ஒன்னு குடுங்க அப்படின்னு கேட்டு வாங்கி போட்டா புடிக்கலாம் (இது எப்போ ந்யுயார்க் B&H கடைக்குப் போனாலும் பண்றது தான். ஆனா இங்க எதுவும் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லாததால ஒரு குற்ற உணர்ச்சியே இல்லாம விளையாடலாம்).

தவமாய் தவமிருந்து என்னோட முறை வரும் போது D700 + 70-200 F2.8 VR லென்ஸ் ஒன்னு குடுப்பா அப்படின்னு கேட்டா, அந்த லென்ஸை முதல் நாளே ஆட்டையப் போட்டுட்டு போய்ட்டாங்கன்னு அங்க இருந்த ஆளு சொன்னது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத காரணம்.
உங்களுக்கு பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா, இந்த D300 + 17-55 F2.8 VR எல்லாம் வேண்டாமான்னு அங்க இருந்தவங்க கேட்க வந்த வரைக்கும் லாபம்'னு வாங்கி சும்மா கிளிக்கினேன். அவசரத்தில ISO எல்லாம் செட் பண்ண நேரம் இல்லாத்தால WHITE BALANCE எல்லாம் ரொம்ப சுமாராத் தான் வந்திச்சு. இந்த 17-55 F2.8 VR லென்ஸை விட எனக்கு என்னவோ TOKINA'வோட 12-24MM லென்ஸ் பரவாயில்லைன்னு தோணுது.


அப்படியே கொஞ்சம் சுத்தி சுத்தி வந்தப்போ நான் எதிர்பார்த்த லென்ஸ் வரிசை இருந்திச்சு. வழக்கம் போல அதுல இருக்கறதுலேயே பெரிய சைஸா பார்த்து வரிசையில போய் நின்னுட்டேன். அது பாருங்க இந்த கிரிக்கெட மாட்சில எல்லாம் படம் புடிப்பாங்களே அந்த மாதிரி ஒரு 600MM F4 VR லென்ஸ். அதுவு அதை நிகானோட FLAGSHIP D3 கேமரால மாட்டி வைச்சிருந்தாங்க. இதுக்கு மேலெ என்ன கேட்க முடியும். என்ன தான் கேமராவா இருந்தாலும் லென்ஸா இருந்தாலும் போட்டோ புடிக்கறதுக்கு ஏதாவது இருந்தா தானே திறமையக் காமிக்க முடியும். அதுக்கு அங்க எதிர்பார்த்ததுக்கு மேலேயே மக்கள் இருந்தாங்க.


முதல் போட்டோவ க்ளிக் பண்ணிய உடனேயே வித்தியாசம் தெரிஞ்சுது. போகஸ் பண்றது போட்டோ எடுக்கறது அப்படின்னு இரண்டு விஷயம் நடந்த மாதிரியே தெரியல. வினாடிகள்ல நழுவக் கூடிய அந்த தருணங்களை எல்லாம் அசால்டா படம் புடிச்சுது இந்த கேமரா லென்ஸ் குழு. அதுவும் இங்க மேலெ இருக்கற முதல் படத்தை ஒரிஜினல் சைஸ்ல பாக்கும் போது என்னோட கண்ணே பட்டுரும் போல இருந்தது. கிட்டத்தட்ட ஒரு 30 அடி தூரத்தில இருந்து போட்டா எடுத்தா ஒவ்வொரு முடியும் தனித்தனியா தெரியற மாதிரி போட்டோ வந்தா பின்ன என்ன தான் பண்றது :-) இந்த படங்கள் எல்லாம் ISO 800’ல எடுத்தது. ம்ஹும். இந்த கேமராவ தொட்டு பாத்ததுக்கே ஜெர்மனி பயணம் worth.
அப்படியே பக்கத்தில நிகானோட போட்டோ ஷூட் நடந்திட்டு இருந்திச்சு. இது கொஞ்சம் நாமளே பண்ணக்கூடிய மாதிரியான ஷூட் தான். போட்டோ புடிக்கும் போது கேமரா பின்னாடி இருக்கற அந்த தம்மாத்தூண்டு ஸ்கிரீன்ல ப்ரிவியூ பாக்கறத விட இங்க இருக்கற மாதிரி ஒரு 30” டிவில பாத்தா நல்லாத்தான் இருக்கு.

நான் அங்கே குறிப்பா பார்க்கப் போனது, நிகானோட D700 அப்படிங்கற புது FULL FRAME SENSOR (FX) கேமரா. இந்த FULL FRAME SENSOR வந்து ஒரு 4-5 வருஷம் ஆகுது. கேனன் வழக்கம் போல ஊருக்கு முன்னாடி இந்த சைஸ் சென்சரை கேமரால மாட்டி விக்க ஆரம்பிச்சுட்டாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்த கேனன் 5D தான் $2500 வரை செலவு பண்ண துட்டு இருக்கிற ஏழை மக்களோட FULL FRAME SENSOR கேமரா. இப்போ வந்திருக்கற கேனன் 5D MARK II, ஒரு 21 MP ஃபுல் ஃபிரேம் கேமரா. சென்சர் சைஸ மட்டும் பாக்காதிங்க. 12MP சென்சர் இருந்தாலும் D700’ம் ஒரு அட்டகாசமான கேமரா தான்.

FULL FRAME/APC SENSOR இதைப் பத்தியெல்லாம் பல பேர் பல பதிப்புகள்ல தேவையான அளவு அலசிட்டதால, FULL FRAME’ரோட அருமை பெருமைகளை சுருக்கமாச் சொல்றேன். இரண்டே விஷயம் தான். 1) இந்த 1.5x, 1.4x CROP FACTOR எல்லாத்தையும் மறந்திடலாம். இப்போ 18MM'னா அது நிஜமாவே 18MM WIDE ANGLE லென்ஸா இருக்கும். 2) சென்சர் அளவு பெரிசுங்கறதால, PIXEL எல்லாம் தள்ளித் தள்ளி இருக்க, எக்கச்சக்கமான ISO ரேஞ்சு வச்சாலும் புள்ளி புள்ளியாத் தெரியாது. அதனால குறைந்த ஒளியிலும் கூட தரமான படங்களைப் பிடிக்கலாம்.

D700 வைச்சு அப்படி என்ன படம் காமிக்க முடியும்னு பாக்கறிங்களா .. கொஞ்சம் கீழெ பாருங்க. EXTRA BATTERY GRIP’ம் சரியான லென்ஸும் இருந்தா ஒத்தை வினாடில எட்டு படங்களை அம்சமா போகஸ் பண்ணி முழு 12 மெகா பிக்ஸல்ல படம் புடிக்கலாம்.இன்னைய தேதியில அதிக RESOLUTION வேணும்னா கேனன் ஒன்னு தான். FULL FRAME+SPEED(fps) அப்படின்னா நிகான் தான். ஃபுல் ஃபிரேம் கேமரா வாங்க கிளம்பிட்டீங்களா ? .. கொஞ்சம் பொறுங்க. HASSELBLADம், MAMIYA இவங்க கதையயும் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க.

No comments:

Post a Comment