கலோன் ரொம்ப சுலபமா சுத்தி பாக்க கூடிய ஊரு. ஊருக்கு நடுவுலெ ஒரு பெரிய கிறுத்துவ தேவாலயம்(இனிமேல் DOM'னு தான் சொல்ல போறேன்), அதை சுத்தியும் கடைத்தெரு(நம்ம ஊர் மாரியம்மன் கோவில் ஞாபகம் வந்தது). பக்கத்திலேயே ரைன் நதி. சின்ன அழகான ஊர்.
எந்த ஊருக்கு போனாலும் கம்மி செலவுல என்னெல்லாம் பார்க்க முடியுமோ அதையெல்லாம் அதை எல்லாம் ரவுண்டு கட்டி பாக்கற நம்ம பாரம்பரியப்படி, DOM 'ட உச்சி வரைக்கும் ஓசியிலேயே போக முடியும்னு தெரிஞ்சதும் கிளம்பிட்டேன். ரொம்ப குறுகலான ஒரு ஒத்தையடிப் பாதையில வளைச்சு வளைச்சு கிட்டத்தட்ட ஒரு ஐந்நூறு படி ஏற விட்டாங்க. இதுல எதிர வரவங்களுக்கு சைடு வேற குடுக்கணுமாம்.
என்னை மாதிரி தினமும் காலையில எழுந்து கம்ப்யூட்டர் (கணிப்பொறி) மூஞ்சில முழிக்கற டைப்பா இருந்தீங்கன்னா, உடம்பு எப்படி பழனி படிக்கட்டு மாதிரி இருக்கும்னு உங்களுக்கு
தெரிஞ்சுருக்கும். ஐந்நூறு படியில ஐம்பது படி ஏறின உடனே கண்ணை கட்ட ஆரம்பிச்சுடுச்சு. சரி கோவிலுக்கு வந்துருக்கோம், போற வரைக்கும் புண்ணியம்'னு நினைச்சிட்டே ஐம்பது படிக்கு ஒரு தபா ஐஞ்சு நிமிஷம் இளைபாரிட்டு முன் வைச்ச காலை பின் வைக்காம போயிட்டு இருந்தேன். சில வெளிநாட்டு பெரிசுங்க மூட்டை மூட்டையா தூக்கிட்டு, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்கற மாதிரி, சிரிச்சிட்டே மேலேயும் கீழேயும் நடந்திட்டு இருந்தது கொஞ்சம் கடுப்பு கலந்த பொறாமையா இருந்திச்சு.
கிட்டத்தட்ட பாதி வழியில பிரபலமான DOM'மோட மணிகள் இருந்திச்சு. "மணிகள்"கிறது typo கிடையாது. அங்கே ஒரு மணி இல்லை, இரண்டு மணி இல்லை. மொத்தம் ஐஞ்சு மணி இருந்திச்சு. அதிலே ஒன்னு நம்ம தஞ்சாவூர் பெரிய கோவில் மணி கணக்கா இருக்க, மத்ததெல்லாம் சப்போர்ட்டுக்கு இருந்திச்சு. ஒரு உதாரணத்துக்கு இந்த படத்தை பாருங்க. அந்த மணியோட சத்தம் வெளிய போற மாதிரி, சுவத்தில வழி எல்லாம் இருந்திச்சு.
ஒரு முக்கால்வாசி தூரம் போனதுக்கப்புறம், அந்த ஒத்தையடிப் பாதை முடிஞ்சு ஒரு REST AREA வந்திச்சு. அங்கே பார்த்தா, நயாகரா'ல குவிஞ்சு கிடக்குற இந்தியர்கள் மாதிரி, ஜப்பான் மக்கள் எக்கச்சக்கமா இருந்தாங்க. அடுத்த நாள் PHOTOKINA போற வரைக்கும் அது ஏன்னு புரியவே இல்லை.
அந்த ஒத்தையடிப் பாதையில இருந்து உச்சி வரைக்கும் வழி நெடுக நம்
ம ஊர்ல "முருகன் ♥ கல்யாணி"னு எழுதற மாதிரி வகை வகையா எழுதி வைச்சிருந்தாங்க. உச்சிக்கு போனப்போ அங்க ஒரு குரூப்பு, ஒரு வெள்ளை கலர் மார்க்கர் எடுத்திட்டு வந்து சின்சியரா அவங்களோட பேர கிறுக்கிட்டு இருந்தாங்க. வாழ்க்கையில பாஸ் பண்றதுக்கு வேண்டுதலோ என்னவோ.
வழக்கமான பிரார்த்தனைகள் தவிர அங்கே நிறைய பேர் நம்ம ஊரு நெய்விளக்கு மாதிரி தீபம் ஏத்திகிட்டு இருந்தது கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சு. அப்போ கிளிக்கியதில் சிக்கியது ஒன்னு இங்கே.
DOM'க்கு வெளிய மக்கள் நடக்கறதுக்கு கொஞ்சம் பெரிய PIAZA ஒன்னு இருந்திச்சு. வழக்கம் போல அங்க நிறைய வித்தை காமிச்சுட்டு இருந்தாங்க. சிலை மாதிரி ஒருத்தர் நிக்க, பக்கத்திலேயெ இருத்தன் பல்டி அடிச்சிட்டு இருந்தான். ஒருத்தன் சைக்கிள்'ல வித்தை காமிக்க, குழந்தைங்க எல்லாம் விளையாட அங்கே ஏதாவது நடந்துகிட்டே இருக்கு.
இந்த DOM தான் கலோன்'ல பார்க்க வேண்டிய விஷயம்'னு சொன்னாங்க. சரி, வந்தது வந்தாச்சு, அப்படியே இந்த Photokina' வையும் டிக் அடிச்சுடுவோம்னு தான் நுழைவுச்சீட்டு வாங்கினேன். வாழ்க்கையில எடுத்த ஒன்னு ரெண்டு உருப்படியான முடிவுகள்'ல அதுவும் ஒன்னு'னு அடுத்த நாள் தெரிஞ்சுது.
நான நேருல போன எஃபெக்ட்.
ReplyDeleteரைன் நதிய நான் சுவிஸ் போனப்போ கூட பாத்தேன். பல ஊருகளுக்குள்ள ஊரு சுத்ற நதினு நெனக்றேன். ஆக இது MNC மாதிறி MNR போல. நம்ம ஊருல தான் statewise நதிகள பிரிச்சு வெச்சு வேடிக்கை பாக்றோம், அதுல அரசியல் பண்றோம்.
/*கம்மி செலவுல என்னெல்லாம் பார்க்க முடியுமோ அதையெல்லாம் அதை எல்லாம் ரவுண்டு கட்டி பாக்கற நம்ம பாரம்பரியப்படி,*/
ரத்தத்துல ஊறினது டா. ஒன்னியும் பண்றதுக்கில்ல :) மேல கஷ்டப்பட்டு ஏறி இருக்கே. உன்னோட கஷ்டம் எனக்கு நல்லாவெ புறியுது.
/*அந்த ஒத்தையடிப் பாதையில இருந்து உச்சி வரைக்கும் வழி நெடுக நம்ம ஊர்ல "முருகன் ♥ கல்யாணி"னு எழுதற மாதிரி வகை வகையா எழுதி வைச்சிருந்தாங்க.*/
இந்த கலாச்சாரம் நாம ஆரம்பிச்சது தான்னு நெனைக்கிறேன். சிலரு ஒரு படி மேல போயி படம் வேர வரஞ்சி வெச்சிருபானுங்க. அப்டி நீ எதாவது பாத்தியா?
உன்னோட photokina போஸ்டுக்கு வெயிட்டிங்க்.