அப்படியே ஷாட்டை
உள்ள போய் என்ன பாக்கப்போறோம், என்ன பண்ணப்போறோம்னு புரியாம, வழக்கம் போல நிறைய பேர் எந்தப் பக்கம் போனாங்களோ அந்தப் பக்கமா நானும் நண்பன் G.ஷங்கரும் நடந்து போக ஆரம்பிச்சோம். வாசல்லியே வழி மறிச்சு இரண்டு பொண்ணுங்க ஒ
அங்க உள்ள போய் பாத்தா ஏதோ ஏர்போட்டுக்கு வந்த பீலிங். செக் இன் பண்றதுக்கு ஒரு 20-25 COUNTERS இருந்திச்சு. டிக்கெட்ட சரி பார்த்து உள்ள போறதுக்குள்ளேயே நாம சரியான இடத்துக்கு தான் வந்துருக்கோம்னு தோணிச்சு. சில காட்சிகள் இங்கே.
உள்ளே நுழைஞ்சவுடனே கண்ல பட்டது, கேனன்'னோட(Canon) கோட்டை. அடடா, நாம நிகான் (Nikon) கேமரா வைச்சிருக்கோமெ நம்மள எல்லாம் இவங்க விளையாட்டில சேர்த்துப்பாங்களான்னு கொஞ்சம் சந்தேகத்தோட தான் நுழைஞ்சேன். அங்கே இது மாதிரி இனப் பாகுபாடு எல்லாம் பாக்கற மாதிரி தெரியல. எல்லோரையும் சந்தோசமா உள்ளார கூப்பிட்டு படம் காமிச்சிட்டு இருந்தாங்க. அங்க ஒரு இடத்தில மட்டும் கொஞ்சம் கூட்டம் ஜாஸ்தியா இருக்க, நம்மளோட ப்ராபபிலிடி (PROBABILITY) தியரி படி இங்க ஏதாவது விஷயம் இருக்கணும்னு நானும் வரிசையில போய் நின்னுட்டேன்.
அங்க பார்த்தா, பத்திரிக்கையிலயும் கடையிலயும் மட்டுமே இதுவரைக்கும் பார்த்திருந்த PRO கேமரா மற்றும் லென்ஸ் எல்லாத்தையும் வரிசையா TRIPOD'ல மாட்டி வைச்சு விளையாடுங்கன்னு ஃபிரீயா விட்டுட்டாங்க. ஆஹா. இந்தக் கேமராவ எல்லாம் தொட்டுப் பார்க்க முடியும்னு தெரிஞ்சவுடனே குஷியாயிடுச்சு. என்னோட முறை வரும் போது, எனக்கு முன்னாடி இருந்தவர், கேமராவில இருந்த மெமரி கார்டை கழட்ட, அட இதுவேறயா அப்படின்னு சந்தோசம் இரண்டு மடங்கு ஆயிடுச்சு. ஓசியில PRO கேமரால படம்புடிக்கறதுன்னா சும்மாவா. என்னோட மெமரி கார்டை எடுத்து அங்க இருந்ததிலேயே பெரிய கேமராவில போட்டு ஷட்டர்ல கை வைக்கும் போது, ஏனோ (தேவை இல்லாம) ஆர்னால்ட் ஸ்வாஸர்நெகர் ஞாபகம் வந்திச்சு.
நான் வச்சிருக்கறது நிகான் கேமரான்னாலும் எனக்கு கேனன் கேமரா மற்றும் லென்ஸ் மேல எக்கச்சக்க மதிப்பு உண்டு. ஆனா, எனக்கு கிடைச்ச அந்த வாய்ப்பு என்னை பெருசா எதுவும் கவர்ந்திடல. மேலே இருக்கற புகைப்படங்கள் எல்லாம் நான் கேனன் கேமரால சுட்டது தான். கடைசி வரைக்கும் போகஸ் சரியா ஆகாத மாதிரியும் கொஞ்சம் பொறுமையா போகஸ் ஆகறமாதியும் தோணிச்சு. நான் ரொம்ப எதிர்பார்த்தேனா, இல்லை அந்த லைட்டிங்க்கு இன்னும் கொஞ்சம் ISO அதிகம் வைச்சுருக்கமான்னு தெரியல.
அப்படியே கீழெ இறங்கி சுத்திப் பாக்கும் போது கேனனோட MACRO லென்ஸ் இருந்திச்சு. MACRO லென்ஸ்'கிறது இந்த சின்னச் சின்ன பூ, புழு, பூச்சி
அப்படியே கெளம்பி வரும் போது கேனனோட லென்ஸ் வரிசையப் பார்த்த்தேன். ஏற்கனவே பத்திரிக்கையில பார்த்ததுதான். இருந்தாலும் கொஞ்சம் உற்றுப் பாக்கும் போது, நடுவில என்னவோ வித்தியாசமா இருந்திச்சு. பக்கத்தில போய் பாத்தா, கேனனோட IS எனப்படுகிற Image Stabilization டெக்னாலஜி எப்படி வேலை செய்யுதுன்னு ஒரு சின்ன மாதிரி (PROTOTYPE) வைச்சிருந்தாங்க. அந்த சிவப்பு பொத்தானை அமுக்கினா IS என்ன பண்ணும்னு கண்ணால பாக்கலாம். அசந்துட்டேன். இப்படி அப்பட்டமா சொன்னாலும் அவ்வளவு ஈசியா காப்பி அடிக்க முடியாது போல. அதான் தைரியமா வைச்சிருக்காங்க.
கொஞ்சம் தள்ளி இதே மாதிரி அவங்க கேமராவோட CROSS SECTION'னை வெட்டி வைச்சுருந்தாங்க. அங்க இன்னும் நுண்ணியமா (DETAILED'டா) பாக்கிற மாதிரி ஒரு பூதக்கண்ணாடி கூட இருந்தது.
கேனனோட இன்னொரு எளிமையான ஆனா அசத்தலான விளக்கம். இது அவங்களோட POINT&SHOOT கேமரால இருக்கற MOTION DETECTION டெக்னாலஜி பத்தி. ஒரு கட் அவுட்டை ஆட்டி விட்டு MD'க்கு முன், MD'க்குப் பின் அப்படின்னு படம் பிடிச்சுக் காட்டி என்னை மாதிரி பாமரர்களுக்கும் புரியறமாதிரி விளக்கினாங்க.
அப்படியே வரும் போது, முதல் போட்டோவில இருக்கற ஒரு கேனன் PRO அவர் எடுத்தப் படங்களைக் காமிச்சு, கேனனோட அருமை பெருமை எல்லாம் விளக்கிட்டு இருந்தாரு.நிகானோட பகுதிக்குப் போறதுக்கு முன்னாடியே என்னை அசர வைச்சது நான் கையில வைச்சிருந்த 18-200mm VR லென்ஸ். அங்க இருந்த UNEVEN LIGHINTING'லேயும் சும்மா அம்சமா இந்தப் பெரியவரா படம் புடிச்சுது. என்னடா இன்னும் இவன் கேனன் கதையவே முடிக்கலேன்னு பாக்கறிங்களா. அது என் தப்பில்லீங்க. அங்க அவ்வளவு விஷயம் இருந்தது.
அற்புதம். தெளிவா விளக்கியிருக்கே. மேக்ரோ லென்ஸ் கஷ்டத்த நானும் பட்டிருக்கேன். ஒரு புள்ளி ஃபோகஸ் ஆனா, இன்னொரு புள்ளி out of focus ஆயிடும்.
ReplyDeleteமத்த படி எழுதின விதம் நல்லா இருக்கு. நம்ம கலாச்சரப்படி கரெக்டா எங்க கூட்டம் இருக்கோ அங்க போயி நின்னிருக்கே. நல்லது :)
Wow "kili pillai ku puriyara madhiri sollaradhu" nu solluvanga theriyum aa? it was jus like that... so clear and informative...
ReplyDeleteappadiyey photokina la oru round pona feel :)