Sunday, February 1, 2009

Feb 09 - PIT

ஃபிப்ரவரி மாசத்துக்கு ஏதாவது ஆக்‌ஷன் படம் காமிக்கனும்னு சொல்லிட்டாங்க. வழக்கம் போல கிளரி பாத்ததில இந்த படம் மாட்டிச்சு. வெனிஸ்’ல இந்த PIAZZA ரொம்ப பிரபலம். ITALIAN JOB படத்தில கூட வருமே அதே இடம் தான்.

அங்க புறாக்களை கையில வைச்சு படம் எடுக்கறதுக்காக கடலை பொரி மாதிரி ஏதோ ஒரு தின்பண்டத்தை கையில வைச்சு புறாக்களை கவர்றது சாதாரணமா நடக்கிற விஷயம். அந்த முயற்சியில பாவம் இந்தப் பொண்ணுக்கும் புறாவுக்கும் ஏதோ பிரச்சனை ஆகி, அந்த புறா பொண்ணோட தோள் மேலெ உக்காந்து வில்லன் மாதிரி பாக்க, அந்த பொண்ணு வீல்’னு கத்த, அந்த பக்கமா பராக்கு பாத்திட்டு இருந்த நான் டப்புன்னு படம் புடிச்சிட்டேன்.

இந்த மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்கும் போது சில சமயம் CONTRAST, LIGHTING, COMPOSITION இதெல்லாம் பாக்க நேரம் இருக்காது. அதனால கிடைச்ச படத்தை கொஞ்சம் சுமாரான படமா தயார் பண்றதுக்கு கொஞ்சம் பிகாஸாவோட உதவியை எடுத்துகிட்டேன்.

TWO THIRDS rule படி ஒரு கட்டிங் (அதாங்க CROP), கொஞ்சம் CONTRAST, பொண்ணோட தோள்ல இருக்கற புறாவை மிகைப்படுத்து காமிக்க கொஞ்சம் 'SELECTIVE BLURRING' + extra HIGHLIGHTS சேத்தினேன். அம்புட்டு தான்.

4 comments:

  1. I would have used GIMP for selective blurring instead of Picasa. Selective blurring really spoiled the beauty of the picture - IMO

    ReplyDelete
  2. படம் ஆக்‌ஷனுக்குப் பொறுத்தமாக இருக்கிறது.

    சப்ஜெக்டே ,”ஆக்‌ஷன்” என்று சொல்லுவது போல் அமைந்திருக்கிறது.பாதம் வரை அமைந்திருந்தால் படம் முழுமை பெற்றிருக்கும்.நீங்கள்தான் சொல்லி விட்டீர்களே...கண நேரக் கண்ணாடியில் ஃபோகசிங் கொஞ்சம் சிரமம்தான் .என்னிடமும் அப்படி சில படங்கள் மாட்டியிருக்கின்றன.

    ReplyDelete
  3. semma timing shot.
    but road la varavanga, poravangala ellam permission illama photo pudikre, eppo unakku tin katta poraanga nu therila machi. :-) paathuko

    ReplyDelete
  4. சரியான டைமிங்.

    வந்த படங்களில் ரொம்ப வித்தியாசமா ஒரு கதை சொல்ற மாதிரியான படம் இது!

    வாழ்த்துக்கள்!

    ஆனாலும் ட்ரூத் சொன்னா மாதிரி ஆயிடாமப் பாத்துக்கங்க:)))!

    ReplyDelete