Monday, January 12, 2009

கலோன் - ஜெர்மனி - ஐந்தாம் நாள் - PHOTOKINA - பாகம் 6

லென்ஸ் பேபி்யைப் பத்தி என்னொட பங்களூரு நண்பன் அமித் முன்னாடியே கதை கதையா சொல்லியிருக்கான். போட்டோகினால லென்ஸ் பேபி ஸ்டாலைப் பாக்கற வரைக்கும், அதை நேரில பாக்க வாய்ப்பு கிடைக்கல. உண்மையச் சொல்லனும்னா, இது ஐஞ்சு நிமிஷத்தில புரிஞ்சுகிட்டு படம் எடுக்கிற வஸ்து கிடையாது. லென்ஸ்னா வட்டமாத்தான் இருக்கனும்னு என்ன சட்டமா’னு இவங்க கொஞ்சம் வளைஞ்சு நெளியற மாதிரி ஒரு ஐட்டம் பண்ணி இருக்காங்க.

மேலெ நடுவில இருக்கறது தான் மாண்டில், இல்லை இல்லை லென்ஸ்பேபி லென்ஸ். இதை சாதாரணா லென்ஸ் மாதிரி நம்ம கேமரால மாட்டி போட்டோ புடிக்க வேண்டியது தான். வித்தியாசம் என்னன்னு மேலெ பாருங்க. முதல் படம் பொதுவா நமக்கு தெரிஞ்ச நேரான லென்ஸ் வைச்சு எடுத்தது. மூணாவது படம் லென்ஸ்பேபி வைச்சு எடுத்தது. போகஸ் ஆன அந்த SWEET SPOT'டைத் தவிர மத்த இடம் எல்லாம் வித்தியாசமா ஒரு எஃபெக்ட் குடுக்குதே, அதுக்காகத் தான் இந்த லென்ஸ் பேபி. விஷயம் தெரியாம படம் எடுக்க முயற்சி பண்ணினா கீழெ இருக்கற படம் மாதிரி ஆயிடும்.

இந்த மூணாவது படத்தில இருக்கற அக்கா தான் பொறுமையா எனக்கு இந்தா பேபியை எப்படி உபயோகிக்கறதுன்னு சொல்லிக் குடுத்தாங்க. முதல்ல, இதுல ஆட்டோஃபோகஸ் சமாச்சாரம் எல்லாம் கிடையாது. பொதுவா நம்ம D40/D70/D90/Xti கேமராக்ள்ல வர வ்யூஃபைண்டரை (VIEWFINDER) வச்சு MANUAL'லா போகஸ் பண்றது கஷ்டம். ஆக முதல் வாரம் கண்வலி நிச்சயம். அப்புறம் இதுல SWEET SPOT நடு சென்டர்ல இல்லாம ஃபிரேம்ல எங்க வேணும்னாலும் வைச்சிக்கலாம்கிறது பழக கொஞ்சம் நேரம் வேணும் போல இருக்கு.

விக்கிப்பீடியால இதை LENS + BELLOWS அப்படின்னு சிம்பிளா சொல்றாங்க. BELLOWS'னா EXTENSION TUBES அப்படின்னு படிச்சிருக்கேன். இது வரைக்கும் பயன்படித்தினதில்லை. அதனால உங்களுக்குத் தியரி வேணும்னா இங்க படிச்சுக்குங்க. ஆக, பைசா இருந்தா கண்டிப்பா முயற்சி செஞ்சு பாக்க வேண்டிய ஐட்டம் இது.


என்னடா சோனி ரொம்ப தீவிரமா டிஜிட்டல் கேமரா, SLR இதுல எல்லாம் இறங்கி இருக்காங்களே, அவங்க அட்ரஸே காணோம்னு பாத்தா, அவங்க கொஞ்சம் தள்ளி பக்கத்து அரங்கத்தை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுத்து வழக்கம் போல பிலிம் காட்டிட்டு இருந்தாங்க. இங்க நான் குறிப்பா பாக்க வந்தது சோனியோட A900 ஃபுல் ஃபிரேம் கேமரா.

நிகானோட சென்சர் எல்லாம் சோனி தான் செஞ்சு தரதா ரொம்ப நாளா ஒரு வதந்தி இருக்கு. தவிர சோனி தானா லென்ஸ் பண்ணாம CARL ZEISS’சோட சேர்ந்து பண்றதால சோனியோட A900 கிட்டத்தட்ட நிகான் கேமரா + CARL ZEISS மாதிரி இருக்குமோங்கிறது தான் என்னோட ஆர்வத்துக்குக் காரணம். தியரி எல்லாம் ஒத்து வந்தாலும், A900 + சோனியோட லென்ஸ் வரிசை எல்லாம் உபயோகிச்சுப் பாக்கும் போது அவங்க நிகான்/கேனனை எட்டிப் பிடிக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்னு தோணுது.

பக்கத்தில ஒலிம்பஸ் (OLYMPUS) கேமராவும் இருந்திச்சு. இவங்களும் MICRO FOUR THIRDS க்ரூப்ல இருக்கறதால புது கேமரா, லென்ஸ் எல்லாம் வைச்சிருந்தாங்க. ஆனா எனக்கு MICRO FOUR THIRDS கேமரா எல்லாம் டெஸ்ட் பண்ணி பாக்க நேரமோ ஆர்வமோ இல்லை. ஆனா அவங்க அங்க ஒரு குட்டி WIRELESS FLASH DEMO வைச்சிருந்தாங்க. அட, இது எப்படியிருக்குன்னு பாக்கலாம்னு களத்தில இறங்கினேன்.

இந்த போட்டோல இருக்கற அக்கா தான் அங்க மேற்பார்வை, மாடல் எல்லாம். அவங்க DEMO காமிக்க முயற்சி பண்ணினப்போ MURPHY's LAW படி, WIRELESS FLASH சொதப்பிடுச்சு. பல தடவை மன்னிப்பு கேட்டதால, பொழச்சு போகுதுன்னு விட்டேன் (ஓசியில வேடிக்கை பாக்க ஜெர்மனி வரைக்கும் போயிருக்கோம்ல:-). அப்புறம் இரண்டு மூணு படம் எடுத்துப் பாத்தேன். ரொம்ப சொல்லிக்கற மாதிரி எதுவும் இல்லை. என்னோட $160 SB600’டே தேவலாம். இன்னொரு தபா ஒலிம்பஸ் FLASH'ஷைத் தேடி போவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.


ஜெர்மனில போட்டோ கண்காட்சிக்கு வந்திட்டு ZEISS லென்ஸைப் பாக்காம இருக்க முடியுமா. உலகமே ஆட்டோபோகஸ், VIBRATION REDUCTION அப்படின்னு புதுசு புதுசா பல விஷயங்களை கொண்டு வந்தாலும், CARL ZEISS $1000’க்கு MANUAL FOCUS லென்ஸ் தான் பண்ணுவேன்னு அடம் புடிக்கற டைப். CARL ZEISS லென்ஸ்ல அப்படி என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்க ரொம்ப நாளா ஒரு அவா.

அங்க இருந்த D200'ல ஒரு 20mm f2.0 ZEISS MF லென்ஸை மாட்டி அங்க இருந்த பூ, செடி கொடி, அப்புறம் பக்கத்தில இருந்த மனுசங்களை எல்லாம் படம் எடுத்துப் பாத்தேன். நானும் எத்தனை நேரம் தான் MANUAL FOCUS’ல படம் எடுக்கத் தெரிஞ்ச மாதிரி நடிக்கறது. முடியலை. கண்வலியோட காத்து வரட்டும்னு கெளம்பிட்டேன்.

அப்படியே போற வழியில TOKINO’வோட, 12-24 f4 DX லென்ஸ் (நிகான் F MOUNT) பாத்தேன். அப்படியே என்னோட D70s’ல சொருகி, அந்த கடையில இருந்த்வங்களையே படம் எடுத்துப் பாத்தேன். படம் ரொம்ப நல்லா வந்திச்சு. DX ஃபார்மேட்ல WIDE ANGLE லென்ஸ் தேவைன்னா கண்டிப்பா இது நல்ல சாய்ஸ். அப்புறம் இந்த முதல் ஃபோட்டோல இருக்கற அக்கா சாதாரணமாவே அப்படித் தான் பாக்கறாங்க. என்னை முறைக்கிறாங்கன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.

கிட்டத்தட்ட வந்த வேலை முடிஞ்சதால, அப்ப்படியே கண்ணுல பட்ட சில RANDOM காட்சிகள் இங்கே. இந்தக் காரை எதுக்கு வைச்சிருந்தாங்கன்னு தெரியலே. ஆனா PORCHE ஆச்சே, அதனால விட முடியல.

இந்த சைஸ்ல எல்லாம் எதுக்கு TRIPOD பண்ணுவாங்கன்னு தெரியல. இந்த TRIPOD'டை GROUND FLOOR’ல வைச்சிட்டு, FIRST FLOOR’ல இருந்தே ஃபோட்டோ எடுக்கலாம் போல இருக்கு. இதுல கூடவே ஒரு ஏணியும் வைச்சிருந்தாங்கன்னா வசதியா இருக்குமோ ?

MONOPOD, TRIPOD அப்படின்னு கேள்விப்பட்டு இருப்பீங்க. GORILLAPOD எப்படி? OUT OF THE BOX THINKING அப்படின்னு சொல்லுவாங்களே, அது இது தான். எங்க வேணும்னாலும் வளைஞ்சு நெளிஞ்சு மாட்டக்கூடிய FLEXIBLE'லான POD இது. செல்ஃபோன்ல இருந்து SLR கேமரா + பெரிய லென்ஸ், வீடியோ கேமரான்னு ஐஞ்சு கிலோ வரைக்கும் தாங்கற மாதிரி நல்லா வடிவமைச்சிருக்காங்க. இன்னும் தெரிஞ்சுக்க இங்க தாவுங்க.

கொஞ்சம் தள்ளி வித்தியாசமா ஒரு மாடலை பெயிண்ட் அடிச்சு, பெயிண்ட் அடிச்சு ஃபோட்டோ எடுத்திட்டு இருந்தாங்க. ஃபோட்டோகிராஃபர்னு வெறும் ஒளி ஓவியம் மட்டும் வரையாம, இவரு லைட்டிங் எல்லாம் செட்டப் பண்ணிட்டு பொறுமையா LIVE'வா வரைஞ்சு ஃபோட்டோ எடுத்திட்டு இருந்தாரு. இருந்தாலும் அந்த மாடல் அம்மாக்கு பொறுமை ரொம்பவே ஜாஸ்தி. மணிக்கணக்கா பெயிண்டை வாங்கிட்டு சிரிச்சுகிடே போஸ் குடுத்துட்டு இருக்கறது சாதாரண விஷயமா?

இங்க தான் எல்லாரும் ஃபோட்டோ எடுக்கறதுக்குன்னே போஸ் குடுத்துட்டு இருக்காங்களேன்னு ஒரு PORTRAIT STUDIO மாதிரி இருந்த கடையில ஃபோட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருந்தப் பொண்ணை நானும் ஒரு ஃபோட்டொ எடுத்தேன். அலைபாயுதே’ல மாதவன் உண்டை வாங்கற மாதிரி ஒரு பெரிசு என்கிட்ட வந்து, அது என் பொண்ணு அப்படின்னு சொல்ல, நான் மனசிலேயே தங்கச்சி செண்டிமெண்ட் கதை ஒன்னு ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் அந்த பெரிசு, சும்மா தமாசுக்குச் சொன்னேன்னு கண் அடிக்க எனக்கு உசிரே வந்திச்சு.

ஃபோட்டோகினா (PHOTOKINA) பற்றிய இந்த சிற்றுரைய (!) இதோட முடிச்சிக்கறேன். நீங்க என்னை விட பொறுமைசாலியா இருந்தீங்கன்னா, ஃபோட்டோகினா பத்தின ஆறு பதிப்பையும் படிச்சு பாருங்க. அடுத்த தடவையில இருந்து கொஞ்சம் சின்ன பதிப்பா எழுத முயற்சி பண்றேன். இப்படியே சும்மா படிச்சிட்டே இருந்தா எப்படி, அப்படியே உங்க பொன்னான கருத்தையும் கமெண்டா செதுக்கீட்டு போங்க.

நன்றி! வணக்கம்!!


3 comments:

  1. உன்னோட மொத்த சீரீஸ்-அ நான் படிச்சிட்டேன். நல்லா புரியுற மாதிரி எழுதியிருக்கே. அடுத்த வருஷம் நான் இங்க இருந்தா ஃபோட்டோகினா கண்டிப்பா போயாகனும் போல இருக்கு. கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு.

    ReplyDelete
  2. ஐயோடா எவ்வளவு கை தேர்ந்த கலைஞரா படமும் அதன் விளக்கமும் .....சூப்பர்...நான் இன்னும், நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது..

    ReplyDelete
  3. Nicely written!!!
    Got the chance to read only today!

    You write well :)

    ReplyDelete